BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலிக்கு ட்விட்டரில் புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் வீரர் விராட் கோலியின் பெயருடன் கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற குறியீடு ட்விட்டரில் இடம்பெற்று வருகிறது. இந்த புதிய குறியீடு ரஃபேல் நடால், கிறிஸ்டியானா ரொனால்டோ, நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோருக்கும் இந்த குறியீடு வந்துள்ளது. இந்த புதிய குறியீடு தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி 23,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அத்துடன் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்திலும் 50 க்கும் அதிகமான சராசரியை வைத்துள்ளார். இதனால் அவருக்கும் இந்த கௌரவம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )