BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அன்னதானம் வழங்கி அதிமுக கட்சித் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அம்மா உணவகம் முன்பு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு எடப்பாடி நகர செயலாளர் A.M முருகன், நகர அம்மா பேரவைச் செயலாளர் T.கதிரேசன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )