தலைப்பு செய்திகள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 74- வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க.சார்பில் தஞ்சையில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 74- வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க.சார்பில் தஞ்சையில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சை மருத்துவ கல்லூரி பகுதி 50- வது வட்டத்தி ல் உள்ள பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை வகித்தார். அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தவமணி, ஒன்றிய செயலாளர் துரை. வீரணன், முன்னாள் துணை மேயரும், 41- வது வட்ட மாநகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், 50- வது வட்ட இணைச் செயலாளர் கார்த்திகா, மருத்துவ கல்லூரி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.எஸ். அருண், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் முரளி முருகன், இளைஞரணி துணைச் செயலாளர் சபரி, 41- வது வட்டக் கழக செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் வி.கே.டி. அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.