BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான, செல்வி ஜெயலலிதா அவர்களது பிறந்த நாள் விழா இன்று கடைபிடிக்கப்பட்டது.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் எம். எல். ஏ. தலைமையிலும், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ்.காளீஸ்வரன் அவர்களது முன்னிலையிலும், கடத்தூர் ஊராட்சி பகுதியில், பேருந்து நிலையம் அருகே, கடத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஊராட்சி செயலாளருமான கே. என். ராசு அவர்களது ஏற்பாட்டில்,

அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான, செல்வி ஜெயலலிதா அவர்களது பிறந்த நாள் விழா இன்று. கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக கொடியேற்றி, செல்வி ஜெயலலிதா அவர்களது திருவுருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )