தலைப்பு செய்திகள்
உடுமலையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா 74_வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர அதிமுகவின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா 74_வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் வக்கீல் மனோகரன் எம்ஜிஆர் மன்றம் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் சாமி என்கின்ற சிவராஜ் மற்றும் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ரம்யா ரமலா சகுந்தலா சௌந்தர்ராஜ் மேலும் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
உடுமலை அதிமுக நகர செயலாளர் ஏ அக்கீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
இதேபோல் உடுமலை ராஜேந்திர ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் அண்ணா தொழிற்சங்க கலாசு தொழிலாளர்கள் சார்பிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
உடுமலை மத்திய பஸ் நிலையம் அம்மா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.