தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் என்னும் உணவகத்தில் நடிகர் அஜித்குமாரின் நடிகர் அஜித்குமாரின் வலிமை வெளியானதை முன்னிட்டு 60 ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கினார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் என்னும் உணவகம் நடத்தி வரும் அஜித் ரசிகரான உணவக உரிமையளர் வீரம் காளிதாஸ் இன்று நடிகர் அஜித்குமாரின் 60 வது திரைப்படமான வலிமை வெளியானதை முன்னிட்டு தனது உணவகத்தில் 60 ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கினார்.
மேலும் வலிமை திரைபடத்தின் முதல் காட்சி டிக்கெட் கொண்டு வரும் ரசிகர்களுக்கு பரோட்டா ரூபாய் 6க்கும் வழங்கினார். அது தவிர அஜித்குமாரின் 60 வது திரைப்படத்தை முன்னிட்டு இன்று வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டீ 6 ரூபாய் எனவும் சிக்கன் பிரியாணி, தலைக்கறி, கொத்து பரோட்டா போன்ற உணவு வகைகளும் ஜுஸ் வகைகள் அனைத்தும் 60 ரூபாய்க்கும் வழங்கினார்.
CATEGORIES தேனி