தலைப்பு செய்திகள்
ஆளுநர் ரவி “முடக்கிவிடுவார்”.. கவனமா இருங்க! வங்கத்தை சுட்டிக்காட்டி திமுகவிற்கு எடப்பாடி எச்சரிக்கை
சேலம்: சேலத்தில் பிரச்சாரம் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்பட கூடாது. தேர்தல் பணிகளை அதிகாரிகள், போலீசார் நேர்மையாக செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்ட ரீதியாக அதிமுக நடவடிக்கை எடுக்கும். எனவே அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அச்சப்பட கூடாது.
தேர்தல் நேர்மை
அவர்கள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். அதற்கான நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம். தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நேர்மையாக தேர்தலை நடத்தாவிட்டால் நாங்கள் நடத்த வைப்போம். அதிமுகவை எதிர்கொள்ளும் திராணி திமுகவிற்கு இல்லை. இப்போது இருக்கும் திமுகவிற்கு அந்த பலம் இல்லை.
தேர்தல் அறிவிப்பு
தேர்தலை அறிவித்து விட்டோம். நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தானே முதல்வருக்கு அழகு. நான் முதல்வராக இருக்கும் போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அப்படித்தானே செய்தேன்.. நாங்கள் எதிர்கட்சியினரை, மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே. அந்த தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பங்களில் ஈடுபட திமுகவினர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுக
திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் நேர் வழியில் வந்ததாக சரித்திரமே கிடையாது. எதாவது தில்லு முல்லு செய்து எப்படியாவது முறைகேடு செய்து, மீண்டும் இந்த தேர்தலில் வென்றுவிடலாம் என்று துடிக்கிறார்கள். அதை 100க்கு 100 சதவிகிதம் முறியடிக்கப்பட வேண்டும். அதை இந்த அதிமுக கண்டிப்பாக செய்யும். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஆளுநர் அங்கு சட்டசபையையே முடக்கி உள்ளார். அதே தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும். திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பெட்ரோல் விலை
பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தனது வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பை செய்யவில்லை. சம்பிரதாயத்திற்கு வெறும் 3 ரூபாயை மட்டும் பெட்ரோலுக்கு குறைத்து உள்ளனர். திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது
மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடரை நிறுத்துவதாக நேற்று அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் அறிவித்தார். இது தேசிய அளவில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது. கூட்டத்தொடர் நடக்கும் போது மொத்தமாக கூட்டத்தொடரை ஆளுநர் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பின் இதை பற்றி விளக்கம் அளித்த ஆளுநர் ஜெகதீப், மேற்கு வங்க அரசின் கோரிக்கையே ஏற்றுதான் அவர் சட்டசபை கூட்டத்தொடரை நிறுத்தியதாகவும், தானாக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.