தலைப்பு செய்திகள்
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல செலக்சன் செய்யபட்டவர்கள் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஜெயலலிதா, எம்ஜிஆர்,பேரறிஞர் அண்ணா, திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பாண்டவர்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நிதியிலிருந்து 7.50 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் மற்றும் கால்வாய் பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட குழு தலைவி சத்யா,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர செயலர் விஜய் பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்,அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் செண்பகமூர்த்தி,தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் :
நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர்
அஜித்குமார் அரசியல் சாயம் இல்லாமல் சினிமா துறையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.
இருந்தபோதிலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மானசீகமாக யாராவது ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வது வழக்கம்.
இந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றார்.
மேலும் நடந்து முடிந்த தேர்தல் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் நடந்த தேர்தல் இதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர் மக்கள் தோல்வியடைந்துள்ளார்
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல ஆட்சியாளர்களால் செலக்சன் செய்யபட்டவர்கள்
அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் லாபத்தினை பார்ப்பார்கள்
செலக்சன் பண்ணியவர்கள் எல்லாம் இனிமேல் கலெக்ஷன் ஆரம்பிப்பார்கள் மக்களுக்கு இனிமேல் தான் தெரியவரும் என்றார்.