BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அலமேலுபுரம் அருகே பீணியாற்றில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் – விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.

அலமேலுபுரம் அருகே பீணியாற்றில் கலக்கும் தனியார் மரவள்ளிக்கிழங்கு ஆலையின் கழிவு நீரால் ஏரிகள் மற்றும் ஆற்றில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் – விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏற்காடு மலையின் பின் பகுதியில் பீணியாறு உருவாகி தமாணிகோம்பை,அலமேலுபுரம், அதிகாரப்பட்டி,அ.பள்ளிப்பட்டி,இருளப்பட்டி,பாப்பம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வாணியாற்றில் கலக்கிறது .

பீணியாற்றின் நீரால் அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மரவள்ளிக்கிழங்கு ஆலையின் ராசாயன கழிவுநீர்கள் அனைத்தும் ஆலையின் அருகே உள்ள பீணியாற்றில் கலப்பதால் பீணியாற்றின் தண்ணீர் நிறம்மாறி காணப்படுவதுடன் அதில் உள்ள மீன்கள் அனைத்தும் கொத்து கொத்தாக செத்து மிதந்து துற்நாற்றம் வீசி வருகின்றது,
அதேபோல் அலமேலுபுரத்தில் உள்ள வன்னான் ஏரியில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்து தூற்நாற்றம் வீசி வருகின்றன.

மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்

பீணியாற்றின் நீரால் இப்பகுதியில் உள்ள 5 கிராமங்களுக்கும் மேற்பட்ட 10ஆயிரம் விவசாயிகள் விவசாயம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
ஆனால் தற்போது ஆற்றில் ஆலையின் கழிவு நீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் தாங்கள் தவிப்பதாகவும், கடந்த மாதத்தில் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டதாகவும் ,நெல் மட்டுமின்றி கரும்பு ,வாழை, உள்ளிட்ட பயிர்களும் கருகி வருகின்றனர் எனவும் , குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமலும் கால்நடைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றது,எனவும் இந்த கழிவு நரை பயன்படுத்துவதன் மூலம் தோல் நோய்கள்
வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் தனியார் கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இருக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )