BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சுற்றுலா மையத்தில் வீணாகும் பூங்கா.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருகின்றனர்.திருமூர்த்தி அணைப்பகுதியில், பாலாறு அணை மதகு அருகில், இரு இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


சிறுவர் விளையாட்டு பூங்கா, உபகரணங்கள், இருக்கை, செயற்கை நீரூற்றுக்கள், மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விலங்குகள் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பூங்காவை பராமரிக்காமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாலும், சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் பூட்டியே வைத்துள்ளதாலும், புதர் மண்டி வீணாகி வருகிறது.பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள், இருக்கை, விலங்குகளின் உருவங்கள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது

மேலும், சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை உடைத்து, சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து, மது அருந்தும் மையமாக மாற்றியுள்ளனர்.திருமூர்த்தி அணைக்கு வரும், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதோடு, ஆபத்தான பகுதிகளில் சுற்றி வருகின்றனர். எனவே, திருமூர்த்தி அணைப்பூங்காவை புதுப்பித்து, சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலித்தால், துறைக்கு வருவாய் கிடைப்பதோடு, சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாகவும், திருமூர்த்திமலை சுற்றுலா மேம்படும்.எனவே, அணைப்பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )