BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவைவிட, இந்தியா கொண்டுள்ள உறவு வேறுபட்டது, புரிந்து கொள்ளக்கூடியது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ், இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகவும், இந்தியாவின் கருத்துகளை மதிப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா கொண்டுள்ள அளவுக்கு, அமெரிக்கா ரஷ்யாவுடன் உறவு வைத்திருக்கவில்லை என்ற அவர், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றார்.

பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ரஷ்யா, இந்தியா இடையேயான உறவு புரிந்து கொள்ளக்கூடியதே என்றும் ப்ரைஸ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகித்த நிலையில் அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்யப்படைகள் உக்ரைனுக்கும் ஊடுருவி சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவிடம் அதிபர் ஜெலன்ஸ்கி சரணையடையக் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், அந்த தகவல் வதந்தி என ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நாட்டை விட்டுக்கொடுக்க போவதில்லை; ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம்’’ என உறுதிப்பட தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் எல்லை அருகே, பெலாரசில் ஹெலிகாப்டர்கள் மற்றும் பெருமளவிலான படைகளை ரஷ்யா குவித்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, உக்ரைனின் எல்லைக்கு அருகில், பெலாரசின் தெற்குப்பகுதியில், சாலை நெடுகிலும் சுமார் 5 மைல் தொலைவுக்கு ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கிலான ராணுவ வாகனங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் படைகளும், ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )