தலைப்பு செய்திகள்
தொடர்ந்து குறையும் முட்டையின் விலை.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 25 காசுகள் சரிந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18-ம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 23-ம் தேதி 25 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 05 காசுகளாக விலை குறைக்கப்பட்டது. நேற்று மாலை மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்து முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பிற மண்டலங்களிலும் விலை கடுமையாக குறைந்துவருவதாலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
CATEGORIES நாமக்கல்