தலைப்பு செய்திகள்
ரஷ்யா – உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
கச்சா எண்ணெய் மட்டுமின்றி கோதுமை, சமையல் எண்ணெய், உலோகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரக் கூடும். இந்தியா தனக்கு தேவையான சூரியகாந்ந்தி எண்ணெய்யை உக்ரைன் நாட்டில் இருந்தே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது யுத்தத்தில் இருக்கும் இந்நாடுகள் உலகின் இரண்டு மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை துவங்கிய செய்தி உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்கு வர்த்தகம் 2702 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, ஆறு மாதத்தில் இல்லாத அளவு 54,529 புள்ளிகளுடன் நேற்று முடிவடைந்தது.
இன்றைய போர் சூழலில், புவிசார் அரசியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் காரணமாக பங்கு சந்தைகள்/பொருளாதாரம் நிலையற்றதாகவே இருக்கும். ஆனால் இந்த படையெடுப்பில் இந்தியா பங்கு வகிக்கவில்லை என்பதாலும், இந்தியாவிற்கு நேரடியாக பாதிக்கப்படாது என்பதாலும், நடுத்தர மற்றும் நீண்ட பொருளாதார அம்சங்களில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படாது என்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் பங்குகளை விற்க வேண்டாம் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.