தலைப்பு செய்திகள்
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் ரூபாய் மதிப்பும்.
மார்ச் 2022 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஊக்கத்தொகையை திரும்பப் பெறுவதற்கான வேகத்தை அதிகரிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து வெளிநாட்டு ஃபோர்ட்போலியோ முதலீட்டாளர்கள் கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் உள்ள தங்களின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் வளரும் நாட்டில் உள்ள நிதியை பெற்று அமெரிக்காவின் கருவூலத்தில் நிறுத்தி பத்திர வருவாயில் எதிர்பார்க்கப்படும் உயர்வு மூலம் பயனடைய விரும்புகின்றனர்.
உலக அளவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கடந்த இரண்டு மாதங்களில் நிதி வெளியேற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நவம்பர் 2021 முதல் தோராயமாக 82,754 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதில் 57,774 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியேற்றப்பட்டதாகும். இந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் தங்களின் பங்குகளை விற்பனை செய்வது மேலும் மேலும் அதிகரிக்கும். வியாழக்கிழமை மட்டும் 6448 கோடியை இந்திய பங்குகளை இருந்து வெளியேற்றியதன் விளைவாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைய துவங்கியது.
வியாழக்கிழமை அன்று எப்ஃ.பி.ஐக்கள் வெளியேற்றப்பட்டதால், உள்நாட்டு நிறுவனங்கள் நிகர முதலீட்டாளர்களாக முன்னேறினார்கள். பங்குச் சந்தைகள் வெளியிட்ட தற்காலிகத் தரவுகளின்படி, வியாழன் அன்று உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.7,667 கோடியை முதலீடு செய்துள்ளனர். இது வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றிய நிதியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உள்நாட்டு நிறுவனங்கள் நிகர மதிப்பாக ரூ. 55,551 கோடியை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
நீண்ட கால பொருளாதார அடிப்படை, வணிக வாய்ப்புகளில் இந்த உலகளாவிய பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே முதலீட்டாளர்கள், இந்த வீழ்ச்சி காலத்தை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் உயர் ரக ப்ளூ சிப் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
பங்கு முதலீட்டாளர்கள்
சந்தைகள் நிலையற்றதாக இருந்தாலும், சில்லறை முதலீட்டாளர்கள் DII முதலீட்டு முறையைப் பார்க்க வேண்டும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். சந்தைகளில் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில் DIIகள் முதலீடு செய்வதால் சில்லறை முதலீட்டாளர்கள் அச்சம் அடைய தேவையவில்லை. பங்குகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அதில் அவர்கள் தங்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 4.7% வீழ்ச்சி அடைந்தது. நடுத்தர மற்றும் சிறிய கேப் குறியீடுகள் 5.5% மற்றும் 5.8%-ஆக குறைந்தது. ஏற்ற இறக்கமான காலங்களில், முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் பங்குகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் அவர்கள் சந்தை மூலதனமயமாக்கல் முழுவதும் முதலீடு செய்வதால், சந்தை மீண்டு வரும்போது அதிக வருமானத்தை ஈட்டுவதால், ஃப்ளெக்ஸி கேப் மற்றும் மல்டி கேப் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்வது நன்மையில் முடியும்.
கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில், 2020ம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 23க்கு இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் சென்செக்ஸ் 14,300 புள்ளிகள்(35%) சரிந்தாலும், அடுத்த ஒரு வருடத்தில் அது புதிய உச்சத்திற்கு உயர்ந்தது என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அடித்தளம் வலுவாக இருப்பதாலும், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை அனைத்தும் புறக்காரணிகளாக மட்டுமே இருப்பதாலும், நிலைமை சீரான பிறகு சந்தை நிலவரம் மீண்டும் இயல்புக்கு திரும்பும். இருப்பினும் முதலீட்டாளர்கள் தேவையற்ற அபாயகரமான முடிவுகளை எடுக்காமல் இருக்க வேண்டும்.
தங்கத்தில் ஒரு பார்வை
நிச்சயமற்ற தன்மை மற்றும் பண வீக்கம் அதிகமாக உள்ள காலகட்டத்தில் தங்கம் ஒரு சொத்தாக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. பங்குகள் குறையும் போது தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். டெல்லியில் ஜனவரி 31ம் தேதி அன்று 10 கிராம் தங்கத்தின் விலை 51,627க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 8.7% அதிகரித்து அது 47,507க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை அன்று 3.3% தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை தற்போதைய நிலையிலிருந்து மேலும் உயர வாய்ப்புள்ளது, ஏனெனில் கச்சா விலை உயர்வு மற்றும் போர் பதட்டங்கள் காரணமாக ஏற்பட்ட பணவீக்கம் தொடர்பான கவலைகளைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை நோக்கி நகர்வார்கள். தற்போதைய நிலைமை தீவிரம் அடைந்தால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தில் முதலீடு செய்வார்கள் அல்லது பணத்தில் தங்களை நீட்டித்துக் கொள்வார்கள் என்று மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.