BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.

குன்னுார் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது அதில் பயணம் செய்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.அச்சமயத்தில் மீட்புபணியில் உடனிருந்த அப்பகுதி மக்களுக்கு
மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம்
கடந்த 8ந் தேதி குன்னுார் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்த காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் மீட்ப்புபணியில் உடனிருந்த அப்பகுதி மக்களுக்கு
கடந்த 13 ந் தேதி தென் பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் விமான விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் கிராமத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு
நன்றியை தெரிவித்து இப்பகுதி மக்களுக்கு ராணுவ மருத்துவமனை சார்பில் ஒராண்டுக்கு மருத்துவ முகாம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதன் ஒருபகுதியாக இன்று மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் இரண்டாவது முறையாக


மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் இராஜேஸ்வர்சிங் துவக்கி வைத்தார். அப்பகுதி மக்களின் உடல்நிலை பரிசோதனை, சாக்கரைநோய், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு MRC ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.. இந்நிகழ்ச்சியில் கர்னல் அனில் பண்டிட் வண்டிச்சோலை பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் (அதிமுக) உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )