தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கை யோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கை யோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவலாங்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் வ/25.இவர் ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை டாஸ்மாக் எதிரில் குடியிருக்கும் திருநங்கை பாக்கியாவுடன் கடந்த நான்கு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் தினேஷ் திருநங்கை பாக்யாவின் வீடு அருகில் உள்ள மரத்தில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் திருநங்கை பாக்கியாவை காணவில்லை என்பதால் போலீசார் பாக்கியா மீது சந்தேகம் அடைந்து திருநங்கை பாக்கியாவை தேடி வருகின்றனர்.
மேலும் இது தற்கொலையா அல்லது கொலையா என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கையோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.