தலைப்பு செய்திகள்
ஆம்பூர் அருகே அமமுக பிரமுகருக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு .
ஆம்பூர் அருகே அமமுக பிரமுகருக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என கூறி யூ.கே.ஜி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வரும் அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் பள்ளியில் மாதனூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாரின் 5 வயது மகன் சர்வீன் யூகேஜி படித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று அதே பள்ளியில் பணிபுரியும் பகுதியை சேர்ந்த ஆசிரியை ராதிகா என்பவர் மாணவன் வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை எனக்கூறி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார .இதில் மாணவனுக்கு கை முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை தாக்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் மாதனூர் வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை தலைமையிலான வருவாய்த் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவனை தாக்கிய பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இது போன்று செயல்படும் பள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.