தலைப்பு செய்திகள்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தமிழகத்தில் அதிக இடங்களில் மேயர் பதவிகளை கேட்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றுது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேயர் பதவிக்கு அதிக இடங்களை கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு தினங்களாக பாஜக-அதிமுகவினர் காங்கிரஸ் பற்றி பல அவதூறான விஷயங்களை சொல்லி வருகிறார்கள் எனவும், நீங்கள் ஒன்றில் உரிமை கோருக்கிறீர்கள் என்றால் அதில் உண்மை, நியாயம் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு கூட்டணி தான் காரணம் என்று பாஜக கூறுகிறது என கூறிய அவர், ஆம் கூட்டணி தான் காரணம், நீங்கள் கூட தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தீர்கள் என்று தெரிவித்தார். மேலும், நீங்கள் தனித்து நிற்பது உங்கள் கொள்கையா? என்று கேள்வி எழுப்பிய அவர், நீங்கள் இந்த தேர்தலில் கூட அதிமுக வுடன் கூட்டணி பேசுனீர்கள், ஆனால் உங்களுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் கரணத்தினால் அதிமுக யோசித்தது என்று கூறினார். மேலும் காங்கிரஸ் அதிமுக பற்றி தவறாக சொல்லவில்லை. பாஜக-வுடன் கூட்டணி வைத்த கரணத்தினால் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள், தமிழக மக்களுக்கு பாஜக செய்யும் தீங்கினை வேடிக்கை பார்த்தீர்கள், அதை தான் நாங்கள் கூறினோம். அதற்காக அதிமுக கோவித்து கொள்கிறது என்று பேசினார். மேலும், இன்றும் இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ் தான், இன்றும் நாங்கள் வலிமையான அகில இந்திய கட்சி என்று தெரிவித்து கொள்கிறோம் எனவும், நிச்சயம் நாங்கள் ஒரு நாள் ஆளும் கட்சியாக வருவோம் எனவும் அவர் கூறினார். மேலும், மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.