BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து செலுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து செலுத்தி வரும் நிலையில்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெமிலி சுங்க சாவடியில் தனியார் கல்லூரியை சேர்ந்த என்சிசி மாணவர்கள் சென்னை மார்க்கமாக மற்றும் பெங்களூர் மார்க்கமாக செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்கள் கார்கள், டிராவல்ஸ் வேன்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் முதலான வாகனங்களை நிறுத்தி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து செலுத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரி மாணவர்கள் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )