தலைப்பு செய்திகள்
பயிற்சி விமானி உயிரிழப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று, நேற்று (பிப். 26) பிற்பகல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மகிமா உயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த விமானி மகிமாவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 27) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், ”தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மஹீமா கஜராஜ் (29). இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் பரந்தாமன்(34). இருவரும் தெலங்கானா செகந்திராபாத்தில் வசித்து வந்தனர். கடந்த நான்கு மாதங்களாக மகிமா, விமானியாக பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது.