தலைப்பு செய்திகள்
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி வேளாண் நிலம் என்பதால், டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும், சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
CATEGORIES திருவள்ளூர்