தலைப்பு செய்திகள்
திருச்சியில் காவல்துறையினர் பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் முகாம் நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி பொதுமக்களின் மனுக்களை துரிதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் பொது மக்களை சந்தித்து குறைகளை தீர்வுக்காக திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சரகம்
சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் இன்று முதல் ஸ்ரீரங்கம் காவல் சரகத்தில் சேர்ந்த ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் ஸ்ரீரங்கம் காவல் சரகம் காவல் உதவி ஆணையர் பொறுப்பு பாரதிதாசன், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜா,
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா
கோட்டை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கோபால் ஆகியோர்
கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.
CATEGORIES திருச்சி