தலைப்பு செய்திகள்
கொரோனோ தொற்று 4வது அணி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மிளகுபாறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் தற்போது திருச்சி மாவட்டத்தில் 2லட்சத்து 35ஆயிரத்து 146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மத வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் ஆகிய பகுதிகளில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான லிஸ்டை வைத்து அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் வரும் ஜூலை மாதம் கொரோனோ நோய்தொற்றின் நான்காவது அலை துவங்கி அது ஆகஸ்ட் மாதம் முடிய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பராஜ், ராமதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்டனர்.