BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில நாள்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை  திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவரது துரைப்பாக்கத்தில் இருக்கும் வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக ஜெயக்குமார், அவரது மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். இருப்பினும் அதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். 120 (பி) – கூட்டுச்சதி, 447 – அத்துமீறி நுழைதல், 326 – பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், 397 – பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல், 506(2) – கொலை மிரட்டல், 109 – குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயக்குமாரைக் கடந்த 25ஆம் தேதி காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இன்று ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் வைஸ்ணவி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு ஆஜர்படுத்தியுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )