தலைப்பு செய்திகள்
உக்ரைன் – ரஷ்யா உச்சக்கட்ட போர் – 210 அப்பாவி மக்கள் உயிரிழப்பு!
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப்படைகள் கடந்த கடந்த 24 ஆம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இன்று 4வது நாளாக சற்றும் தொய்வின்று போர் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம் ரஷ்ய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ள நிலையில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த நாட்கள் போரில் உக்ரைனை சேர்ந்த 210 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பார்க்க முடியாத கொடுமையாக குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன என்று உக்ரைன் அரசு உயர் அதிகாரி லியுட்மிலா டெனிசோவா கூறியுள்ளார். கீவ் மருத்துவமனை குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை, கார்கிவ் குடியிருப்பில் பெண் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.