தலைப்பு செய்திகள்
கொடைரோடு அண்ணன் சமுத்திர கம்மாயில் இராட்சச இயந்திரம் மூலம் லாரி லாரியாக இரவு பகலாக கனிமவள கொள்ளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் கொடைரோடு பகுதியில் பெரிதும் நீராதாரமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சுமார் 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னசமுத்திரம் கண்மாயுள்ளது.
இந்த கண்மாய் 24-மணிே நேரமும் அதிக போக்குவரத்துள்ள தேசிய நான்கு வழி பகுதியில் அமைந்திருந்தாலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ராட்சச ஜேசிபி இயந்திரம் மற்றும் கிட்டச்சி மூலம் இரவு பகலாக லாரிலாரியாக மண் அள்ளி கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இதுகுறித்து வருவாய் துறையினர் கனிம வளத் துறையினர் மற்றும் காவல்துறையினர் என யாரும் கண்டு கொள்ளாததால் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
CATEGORIES திண்டுக்கல்