தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் நிழல் கூடம் அமைத்து தரக்கோரி சிவசேனா கட்சியின் சார்பாக மனு வழங்கினர்.
தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற திருத்தலமாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பக்தர்களும் விசேஷ நாட்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் தேனியிலிருந்து பேருந்து மூலமே வந்து செல்கின்றனர் அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களுக்கு வீரபாண்டி பகுதியில் பயணிகள் நிழல் கூட இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் தெரியாமல் இரண்டு மூன்று இடங்களில் நின்று பேருந்துக்கு அலைக்கழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் வீரபாண்டி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றி பக்தர்களுக்கு ஏதுவாக பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் மற்றும் கட்சியினர் வீரபாண்டி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.