தலைப்பு செய்திகள்
திருச்சிமகனைகாப்பாற்றகோரிகதறிஅழுதபெற்றோர்.
உக்ரைனில் சிக்கி இருக்கும் மகனை மீட்க கோரி திருச்சி ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெற்றோர்.
தண்ணீர் உணவு இன்றி உக்ரேன் தலைனகரில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத தாய்.
கடந்த 24ஆம் தேதி அதிகாலை முதல் உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. நாட்டை காப்பதற்காக உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்புகளும் தப்பவில்லை. உயிர் தப்பிப்பதற்காக உக்ரைன் மக்களும் அந்நாட்டிலுள்ள பிறநாட்டு மாணவர்களும் மக்களும் காற்றோட்டம் இல்லாத பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் நாட்டில் பணி புரிந்தும், படித்தும் வருகிறார்கள் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு தரவேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தி வருகிறார்.
இநிலையில் திருச்சியை அடுத்து திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த மாணவன் சந்தோஷ் உக்ரைனில் டிப்ளமோ படித்து வருகிறார். திருச்சி திருவெறும்பூர் முல்லைக்குடியை சேர்ந்த அஜித் என்ற மாணவரும் உக்ரைனில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்மடக்கு கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் உக்ரைனில் மருத்துவப்படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.