தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி பூஜை.
சிவராத்திரியை முன்னிட்டு வடசேரியில் பிரசத்தி பெற்ற தழுவிய மகாதேவர் கோவிலில் 1008 சங்குகளால் நெல்மணியில் வரையப்பட்ட நந்தி உருவம்- சிறப்பு யாகங்கள் மூலம் சிவராத்திரி பூஜை-மேலும் சிவன் கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு-சிவராத்திரியை முன்னிட்டு 5 கால பூஜைக்கு ஏற்பாடு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவ பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர், அதேவேளையில் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன மேலும் ஐந்து கால பூஜைகள் இன்று முழுவதும் கோவில்களில் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் சிவன் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்,அதேபோன்று நாகர்கோவில் வடசேரி பகுதியில் பிரசித்தி பெற்ற தழுவிய மகாதேவர் ஆலயத்தில் இன்று 1008 சங்குகளால் நந்தி உருவம் நெல்மணிகளில் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது,ஆண்டுதோறும் இதுபோன்ற 1008 சங்குகளில் சிவ வழிபாட்டை குறிக்கும் காட்சிகள் இடம்பெறும் இந்த ஆண்டு நந்தியின் உருவம் வரையப்பட்டுள்ளது,இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். மேலும் சிறப்பு யாகங்கள் மூலம் சிவாச்சாரியார் சிவ பூஜை நடத்தி வருகின்றனர்.