BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

3 கோவில் கலசம் திருட்டு பக்தர்கள் அதிர்ச்சி !

கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற 1500 ஆண்டு பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது இந்தக் கோயிலில் கடந்த மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர் பஞ்சபூதங்களுக்கு ஏற்ப இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னிதி மூவர் கோபுரத்தின் மீது இருந்த மூன்று பழமையான கலசங்களை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் திருடி உள்ளனர் இந்த சம்பவம் அங்கு பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கலசம் 3 அடி உயரம் இருப்ப தாகவும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டது எனவும் கூறப்படுகிறது மேலும் இதனை யார் திருடியது என காவல்துறையினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கி வருகின்றனர் மேலும் கோவிலை சுற்றி இருக்கும் சிசிடிவி கேமரா களையும் சோதனை செய்து வருகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )