தலைப்பு செய்திகள்
பழனி முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் இரவு நேரத்தில் தனியார் பாதுகாவலர் குடிபோதையில் இருந்த வீடியோ.
பழனி முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாவலர் குடிபோதையில் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் சார்பில் தனியார் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .
காலை மற்றும் இரவு நேரத்திற்கு ஷிப்ட் என்ற முறையில் தனியார் செக்யூரிட்டிகள் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் இரவு நேரத்தில் கோவில்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நேற்று இரவு பழனி முருகன் கோவில் அடிவாரம் பாத விநாயகர் கோவில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டி ஒருவர் குடிபோதையில் தள்ளாடிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது கோவிலை பாதுகாப்பிற்காக செக்யூரிட்டி நியமி க்கப்பட்டது கோயிலை பாதுகாக்காமல் குடிபோதையில் இருந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.