தலைப்பு செய்திகள்
பழனியில் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
பழனியில் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பழனி திமுக நகர இளைஞரணி சார்பில், பெரியப்பா நகரில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
மேலும் இளைஞரணி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் வழிகாட்டுதலின் பேரில் இவ்விழாவானது கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், பழனி நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் அறிவுறுத்தலின்படியும் , நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மதன் (எ) மாரியப்பன், பிபிஏ.. தலைமை ஏற்க, ஆதிதிராவிடர் நகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் பிஏ.பிஎட்,.முன்னிலையில்,நகர பொறுப்பாளர்கள் முத்துராஜா, கௌரிசங்கர், சுதாகர் மற்றும் சபரிராஜன் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.