தலைப்பு செய்திகள்
பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் பேச்சு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 16வது வார்டு திமுக வேட்பாளர் கருணாநிதி, 15வது வார்டு மதிமுக வேட்பாளர் மணிமாலா, ஆகியோரை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மதிமுக மாணவரணி செயலாளர் விநாயக ரமேஷ்,மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ், மதிமுக மத்திய பகுதி ஒன்றியச் செயலாளர் சரவணன், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
பிரச்சாரத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில் :
உள்ளாட்சி தேர்தல் என்பது நாற்றங்கால் அந்த நாற்றங்களை ஒரு கூட்டம் தேர்தலை நடத்தாமலே காலம் கடத்தி சென்றது.
உள்ளாட்சி பகுதிகளுக்கு பல்பு வாங்கியதில் 1500 ரூபாய் என கோடி கோடியாய் கொள்கையடித்த கோவையை சார்ந்த வேலுமணி.
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 6000 கோடி ஊழல் செய்த தங்கமணி.
வீட்டு வாசலிலே 70 லட்ச ரூபாய் மணலை குவித்து வைத்து கொள்ளை அடித்த வீரமணி என தற்போது இந்த மணிகளின் ஆட்சி முடிவு வந்துள்ளது.
இன்றைக்கு அவர்களை பயன்படுத்தி கொண்டு எல்லா இடங்களிலும் செய்கின்ற ராஜதந்திர அரசியலை தமிழகத்திலும் செய்ய முயற்சிகின்றனர்.
எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியை தனதாக்கிக் கொள்கிற கபளீகரம் அரசியலை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் எங்கே வேண்டுமென்றாலும் காலூன்றாலம் கடை நடத்தலாம் ஆனால் பெரியார் அண்ணா பூமியில் காலூன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என நிரூபிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் எங்கள் முன்னால் உள்ள மக்களுக்கும் அதை உணர்த்த வேண்டிய உரிமை உள்ளது.
பாசிஸ்டுகளின் உடைய பழிக்கு நீங்களும் நானும் பலிகேடாக ஆகாமல் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
எல்லா புது துறை சொத்துக்களையும் சூரையாடி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இயல்பையே பாலாக்கி இந்தியாவின் மிக குறைந்த விலைக்கு விற்ககூடிய கூட்டத்தின் பிடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
கோவில்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற செய்தி கேட்டால் கோவில்பட்டியில் அடிக்கிற அடி லக்னோவில் இருக்கிற ஆதித்யநாத் கன்னத்தில் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்
ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு பல்லக்கில் கடந்து தமிழகத்தை சமவெளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி என்னும் எட்டு வழி சாலை பேர்வழியை இந்த நாட்டிலே யார் என்று தெரியாத ஒரு அரசியல் அனாதையை சசிகலா முடிசூட்டு பார்த்து அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்து அருந்தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு உரிமையை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தார்கள்.
எனவே உங்களது வாக்குகள் பாறையில் விதைத்து பலனின்றி போகாமல் வாக்கு அளிக்க வேண்டிய சின்னம் உதய சூரியன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.