BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

கீவ் நகரில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரக்கூடிய சூழல் உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உக்ரைன் ரஷ்யா மீது 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால், உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. சபை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபை தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பெலாரஸ் கோமல் நகரில் நேற்று முன்தினம் 5 மணி நேரம் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என 2 நாடுகளும் முடிவு செய்திருந்தன. போரை நிறுத்தி விட்டு படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற உக்ரைன் கோரிக்கைக்கு செவி மடுக்காத ரஷ்யா ஜெலென்ஸ்கியை அதிபர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்துவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய தரப்பு அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெறும் இந்த சூழலில் ரஷ்ய படைகள் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஜெலென்ஸ்கி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். போலந்து – பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அரைமணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )