தலைப்பு செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சியில் புதியஉறுப்பினர் பதிவி ஏற்பு விழா.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன மேற்கண்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தற்போது பதவி ஏற்பு விழா திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது புதிதாக பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், திமுகவில் இணைந்த சுயேச்சைகள் என 42 கவுன்சிலர்களுடன் அசுர பலத்தில் உள்ளது திமுக. அதிமுக-5, பா.ஜ.,-1 என எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் மேயர் பதவியைக் கைப்பற்ற பலரும் முயற்சித்து வருகின்றனர். சிலர் கட்சித் தலைமைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மூலம் மட்டும் அல்லாமல், பிற வழிகளிலும் மேயர் பதவியைப் பிடிக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.