தலைப்பு செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாககன்னியம்மன் கோவில் அருகே ஒரு பெண் உள்பட 4 பேர் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து சாக்குபையை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கம்பம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த லதா, தேவாரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், கூடலூரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய சசிக்கனி என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
CATEGORIES Uncategorized