தலைப்பு செய்திகள்
“மணிப்பூரை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்” பிரதமர் மோடி பகீர்.
மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “காங்கிரஸின் முக்கிய நோக்கம் வளர்ச்சி அல்ல; மணிப்பூரை கொள்ளையடிப்பது தான்.
காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிளவுபடுத்தி தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சி செய்தது காங்கிரஸ். எனவே காங்கிரஸ் ஒருபோதும் வாய்ப்பளித்து விட கூடாது. மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். 100 கோடியில் ஸ்டார்ட் அப் உருவாக்கப்படும்.” என அவர் கூறினார்.
CATEGORIES Uncategorized