தலைப்பு செய்திகள்
100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை 7 மணிக்கு பணிக்கு வரச்சொல்லுவதை கண்டித்தும், வேலை நேரத்தை 9 மணியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
CATEGORIES திருவண்ணாமலை