தலைப்பு செய்திகள்
விவசாயி கொலை வழக்கு வசமாக சிக்கிய தம்பதியினர் கோர்டின் அதிரடி உத்தரவு.
விவசாயி கொலை வழக்கில் தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் பகுதியில் விவசாய லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது உறவினரான ராமன் என்பவருக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே இடத்தில் வேலி அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராமன் மரக்கட்டையை எடுத்து லக்ஷ்மணனை தாக்கியுள்ளார். இதற்கு ராமனின் மனைவி சின்னப் பொண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த பாலவிடுதி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமன் உயிரிழந்து விட்டார்.
எனவே இந்த வழக்கு மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ராமன் மற்றும் சின்ன பொண்ணு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமனுக்கு ரூபாய் 2 ஆயிரமும், சின்ன பொண்ணுக்கு ரூபாய் 3 ஆயிரமும் அபராதம் விதித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.