BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சியில் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களின் விழிப்புணர்வு பேரணி.

திருச்சியில் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களின் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பிரதம மந்திரியின் பாரதிய மக்கள் மருந்தகம் இந்தியா முழுவதும் 8550 மருந்தகங்களும், தமிழ்நாட்டில் 860 மருந்தகங்களும் செயல்படுகின்றன .

இந்த மருந்தகங்களில் நீரழிவுநோய் , உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக குறைபாடு , புற்றுநோய், தோல் நோய் ,எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மத்திய அரசால் பரிசோதிக்கப்பட்ட தரமான மருந்துகளை 30 சதம் முதல் 60 சதம் வரையில் குறைந்த விலையில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்களை மக்கள் மத்தியில் மேலும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் பாரதிய மக்கள் மருந்தக பிராந்திய முகவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியினை பாரதீய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் , டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணி உத்தமர்கோயில் , நெ. 1 டோல்கேட், மாருதி நகர், ஆனந்தா நகர் வழியாக டோல்கேட் ரவுண்டானா பகுதியில் உள்ள பாரதிய மக்கள் மருந்தகம் முன் பேரணி முடிவடைந்த து. பேரணியில் பிஜேபி கட்சி நிர்வாகிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவ மாணவிகள் , மக்கள் மருந்தக கடை உரிமையாளர்கள், விற்பனை பிரதிகள. என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )