தலைப்பு செய்திகள்
சென்னை வரலாற்றில் முதன் முறையாக தேர்வாகிறார் இளம் மேயர்.
சென்னை மாநகராட்சியில், 74-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரியா (28). எம்.காம் பட்டம் பெற்றுள்ள இவர், திரு.வி.க.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் மகள் ஆவார். இவர்களின் குடும்பம் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் விசுவாசிகளாக உள்ளனர்.
பிரியாவை, சென்னையின் மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் இவர் மேயராவது உறுதியாகிவிட்டது.
மேயராக பிரியா தேர்வானால், சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதல் இளம் மேயராகவும், முதல் பட்டியல் சமூகப் பெண் மேயராகவும், இரண்டாவது பெண் மேயராகவும் தடம் பதிப்பார். சென்னையில் முதல் பெண் மேயராக 1957-ம் ஆண்டு தாரா செரியன் பதவி வகித்தார்.
CATEGORIES சென்னை