BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக மாற்றி விறுது பெறுவோம் என புதிய மேயர் சண்.ராமநாதன் உறுதி .

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக மாற்றி விறுது பெறுவோம் என புதிய மேயர் சண்.ராமநாதன் உறுதி அளித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டுகளில். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40 உறுப்பினர்களையும், அதிமுக 7 வார்டு உறுப்பினர்களையும், பாஜகவும், அமமுக தலா ஒரு வார்டையும், சுயேட்சை இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும், மறைமுக தேர்தல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் தேர்தலை புறக்கணித்தார். மீதம் 50 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் திமுக மேயர் சன்.இராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துணை மேயர் மணிகண்டன் 11 வாக்குககள் பெற்று தோல்வியுற்றார்.

இதன் மூலம் தஞ்சை மாநகராட்சியின் திமுக முதல் மேயராக சன்.ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாநகராட்சி கடந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிக்கான விருதை பெற்றது அதேபோல் வருகிற ஆண்டிலும் தஞ்சை மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக விருது பெறும் அதற்காக உழைப்போம் என மேயர் சண்.இராமநாதன் உறுதி அளித்துள்ளார்

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )