BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய தினத்தை காட்டிலும் இன்று சற்று குறைந்து பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 7,554 பேர், நேற்று 6,561 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது, வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 142 பேர் பலியான நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து காணப்படுகிறது.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை5,14,589 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து குணமானவர்களின் 13,450 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை4,23,67,070 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 69,897 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேபோல் இதுவரை 178.29 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.69% ஆக குறைந்த நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 0.16% ஆக உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )