தலைப்பு செய்திகள்
மத்திய தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட கட்டணக் குறைப்பு உத்தரவு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி.
அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கும்?இதுவரை இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைத்தாலும் கிராமப்புற ஏழை, எளிய, வசதியற்ற மாணவர்கள் இந்த கல்லூரிகளின் கட்டணம் அதிகம் இருப்பதால் அங்கே பணம் கட்டி சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இனி தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கல்லூரி கட்டணமாக 13,610 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்பதால் ஏழை எளிய வசதியற்ற மாணவர்கள் எளிதாக மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியும்.தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தினால், அது தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு லாபத்தைக் குறைக்கும் பின்னடைவாக இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கும்? மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மத்திய ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்வதற்கு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.