தலைப்பு செய்திகள்
எடப்பாடியில் சேர்மன் பதவி தேர்ந்தெடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.
எடப்பாடியில் சேர்மன் பதவி தேர்ந்தெடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம். சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து வெற்றியாளர்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் எடப்பாடி நகராட்சியில் 30 வார்டுகளில் 17 வார்டுகளை திமுக கைப்பற்றியது. இதனையடுத்து, எடப்பாடி சேர்மனாக திமுகவைச் சேர்ந்த தங்கவேலு அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு மாற்றாக எடப்பாடி திமுக நகரச் செயலாளர் பாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பாஸ்கரை அழைத்துச் செல்லும்போது அவரின் வாகனத்தை மறித்து தங்கவேலு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.