தலைப்பு செய்திகள்
தஞ்சையில் மேயர் வேட்பாளரைவிட துணை மேயர் வேட்பாளர் 3 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் பாஜக அமமுக தலா ஒரு இடத்திலும் இரண்டு சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர் இந்நிலையில் இன்று காலை நடந்த மேயர் தேர்தலில் திமுக மேயர் வேட்பாளர் சண்.இராமநாதன் 39 வாக்குகளும் அதிமுக மேயர் வேட்பாளர் மணிகண்டன் 11 வாக்குகளும் பெற்றனர் அமமுக கவுன்சிலர் வாக்களிக்க வரவில்லை.

இந்நிலையில் மாலை நடைபெற்ற துணை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் காந்திமதி 8 வாக்குகள் பெற்றுள்ளார் மேயர் வேட்பாளர் 39 வாக்குகள் பெற்று உள்ள நிலையில் துணை மேயர் வேட்பாளர் 42 வாக்குகள் பெற்றுள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
