தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீமிதி விழா.

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினாதவழிப்பாடு நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசித் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் தீ மிதி விழா நடைபெற்றது.

அம்மன் தீமித்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லக்கில் எழுத்தருளி அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது,
இதில் கிருஷ்ணகிரி நகரத்தின் முக்கிய சாலை வழியாக சென்ற அம்மன் திருவீதி உலா முடிவில் அம்மன் சன்னதி முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் கரகத்துடன் இறங்கியது, இதனை அடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆண்களும், பெண்களும் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரப் பூஜைகளும் நடைபெற்றது,
இந்த தீமிதி விழாவினைத் தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் நலமுடன் ஆரோக்கியமாக வாழ சாட்டையால் அடி வாங்கி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்,
இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
