BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

எடப்பாடி என்னை ஒண்ணும் செஞ்சிட முடியாது.சீறும் அதிமுக சூப்பர் சீனியர்!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து அக்கட்சியின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான சையதுகான் செய்தியாளர்களிடம் கூறியது:

சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் நான் ஒருவன் எடுத்த முடிவல்ல. தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளின் விருப்பமும் அதுதான்.

கடந்த 3 நாட்களாக எனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தேனியை போல் இன்னும் இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் சசிகலா, டிடிவியை அதிமுகவில் இணைக்க விரும்புகிறார்கள்.”

‘இந்த சூழலில் என்னை போன்றவர்களை ஆதாயம்தேடிகள் என்றும், பழைய எஜமானர்களை கொண்டு வர துடிக்கிறார்கள் எனவும் ஆதிராஜாராம் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இன்னும் சொல்லப்போனால் சசிகலாவால் ஆதாயம் அடைந்தது யார்? நாங்களா அடைந்தோம்?

ஓ.பன்னீர்செல்வமா கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார்? அவரை பதவியைவிட்டு விலகச் சொன்னதே சின்னம்மா தான். எடப்பாடி பழனிசாமிதான் சசிகலாவால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆதாயம் அடைந்தார்.

சசிகலாவை இணைக்கக் கோரி நீங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பார்த்து உங்களை கட்சியில் இருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஓபிஎஸ். இபிஎஸ் இரண்டு பேரும் சேர்ந்த்து எடுத்தால்தான் அது நடவடிக்கை. ஒருவர் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பெயர் நடவடிக்கை அல்ல. எடப்பாடி பழனிசாமியால் மட்டும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது.

தேனி மாவட்ட நிர்வாகிகள் எங்கள் தரப்பு கருத்தை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்திருக்கிறோம். அவர் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எங்கள் இலக்கை அடையும் வரை எங்களிடம் இருந்து இந்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பதான் நாம் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நமது முடிவை தொண்டர்களிடம் திணிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் வகையில் சையதுகான் பேசியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )