BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று திரும்பாமல் செல்வதாக, பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார்.

மடத்துக்குளம் பகுதியில் திண்டுக்கல் -கோவை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வழியே தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு விரைவுப் பேருந்துகள், திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே நின்று பயணிகளை இறக்கிவிட்டு, மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று திரும்பாமல் செல்வதாக, இப்பகுதியில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த பல வருடங்களாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ளே சென்று திரும்பாமல், அரசு விரைவு பேருந்துகள் மெயின் ரோட்டில் நின்றவாறே செல்வதன் காரணமாக, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களது செல்ல வேண்டிய இடங்களுக்கு, செல்ல முடியாமல், மிகவும் தவித்து வருகின்றனர்.

எனவே இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )