தலைப்பு செய்திகள்
10 மற்றும் 12ம் வகுப்பிற்கு 3 வகை வினாத்தாள்கள் !

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதலாம் திருப்புதல் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வுக்கான வினா தாள்கள் தேர்வுக்கு முந்தைய தினங்களில் சமூக வலைதளங்களில் லீக் செய்யப்பட்டது.
வினாத்தாள் லீக் ஆவது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து வினாத்தாள் இணையதளத்தில் லீக் ஆவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்தது இதில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அருள் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் அரசு தரப்பில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதை அடுத்து இரண்டாம் திருப்புதல் தேர்வை ஒட்டி மூன்று வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் இதனால் வினாத்தாள் இணையதளம் மூலமாக லீக் செய்யப்படாது என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
